ETV Bharat / bharat

மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்து நிறுத்தம்! - பிரதமர் மோடி

மணிப்பூர் மாநிலத்தில், இன மோதல்களால் இடம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களைச் சந்திக்கும் பொருட்டு, ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இம்பாலுக்கு வருகை தந்து உள்ளார்.

Rahul Gandhi's convoy stopped by police in Manipur
மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்து நிறுத்தம்!
author img

By

Published : Jun 29, 2023, 4:20 PM IST

Updated : Jun 29, 2023, 5:05 PM IST

இம்பால் (மணிப்பூர்): நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கும், நிவாரண முகாம்களைப் பார்வையிடுவதற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாட்கள் பயணமாக, இம்பால் வந்து உள்ளார்.

அங்கிருந்து, ராகுல் காந்தி, சுராசந்த்பூர் புறப்பட்டார். இந்த வழியில், வன்முறை ஏற்படும் அபாயம் உள்ளதால், ராகுலின் கான்வாய், இம்பாலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஷ்ணுபூரில், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள உட்லோ கிராமத்திற்கு அருகே கான்வாய் மீது எரிக்கப்பட்ட டயர்கள் மற்றும் கற்கள் வீசப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ராகுல் காந்தியின் கான்வாயை, பிஷ்ணுபூர் அருகே, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு அப்பால், ராகுல் காந்தியை அனுமதிக்க முடியாது, என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இரண்டு பக்கங்களிலும் நின்று கொண்டு, ராகுல் காந்தியைப் பார்த்து கையசைத்து கொண்டு இருந்தனர். காவல்துறையினர், ஏன் எங்களை தடுத்து நிறுத்தினார்கள் என்பது புரியவில்லை என்று, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

ராகுல் காந்தி உள்ளிட்ட இன்ன பிற தலைவர்களை, காவல்துறையினர் ஏன் முன்னோக்கி செல்ல அனுமதிக்கவில்லை என்பது தெரியவில்லை. மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக மட்டுமே, ராகுல் காந்தி, இங்கு வருகை தந்து உள்ளார். நாங்கள் 20 முதல் 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணித்து உள்ள நிலையில், எங்குமே, சாலைமறியல் நடந்ததற்கான அடையாளங்களே இல்லை. காவல்துறைக்கு, எங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவை, யார் பிறப்பித்தார்கள் என்பது தெரியவில்லை என்று, வேணுகோபால் வினவி உள்ளார்.

அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டே, பிஷ்ணுபூரில், ராகுல் காந்தி கான்வாய் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ராகுல் காந்தியை, பாதுகாப்பாக இப்பகுதி வழியாக செல்வதை உறுதிசெய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

இம்பாலுக்கு வெளியே உள்ள நிவாரண முகாம்களுக்கு, ராகுல் காந்தி செல்வதையும், மக்களுடன் அவர் உரையாடுவதையும் மோடி அரசு தடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூர் மாநிலத்தில், ராகுல் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், தற்போது, மணிப்பூரி மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள நிலையில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் குரலுக்கு செவிசாய்க்கவும், அவர்களை குணப்படுத்தும் தொடுதலை வழங்க முன்வந்து உள்ள ராகுல் காந்தியின் முயற்சிகளை ஏன் நிறுத்த வேண்டும்? என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டேய் மற்றும் குக்கி சமூக மக்களுக்கு இடையே நடந்து வரும் இன மோதல்களின் காரணமாக, அங்கு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மே மாதம் 03ஆம் தேதி, மெய்டேய் சமூக மக்கள், பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்துக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' ஏற்பாடு செய்யப்பட்டபோது வன்முறை வெடித்தது. மணிப்பூரின் மக்கள்தொகையில், தோராயமாக 53 சதவீத மக்கள், மெய்டேய் மக்கள் ஆவர். மீதமுள்ள 40 சதவீதத்தினர் முதன்மையாக மலை மாவட்டங்களில் வசிக்கும் நாகாக்கள் மற்றும் குக்கிகளின் பழங்குடி குழுக்களை கொண்டு உள்ளனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் பொருட்டு, 2 நாட்கள் பயணமாக, ராகுல் காந்தி, இம்பால் வருகை தந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதும், கள நிலவரத்தை மதிப்பிடுவதும் அவரது வருகையின் நோக்கமாகும்.என்பதை,. கே.சி.வேணுகோபால் உறுதிப்படுத்தினார்.

சுராசந்த்பூர் மாவட்டத்திற்குச் சென்று நிவாரண முகாம்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் உரையாடவும், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்கிற்குச் செல்லவும் ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையை, மணிப்பூர் மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங், திறம்பட சமாளிக்கத் தவறியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளதோடு மட்டிமல்லாது, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணம், பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், கள யதார்த்தத்தை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இப்பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் இருப்பது, நடந்து வரும் வன்முறைகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் என்றும், மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணம்: பிஷ்ணுபூரில் இருந்து இம்பாலில் உள்ள விமான நிலையத்துக்குத் திரும்பிச் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திட்டமிடப்பட்டு உள்ள நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி - கட்சியில் மாற்றங்கள் கொண்டு வர பா.ஜ.க மேலிடம் திட்டம்!

Last Updated : Jun 29, 2023, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.