ETV Bharat / bharat

டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு ராகுல் காந்தி திடீர் விஜயம்... வியாபாரி, பொது மக்களிடம் கலந்துரையாடல்!

டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Aug 1, 2023, 1:27 PM IST

டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி, ஸ்ரீநகரில் மூவர்ண கொடியை ஏற்றி தனது யாத்திரையை நிறைவு செய்தார். அது தொடங்கி நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வரும் ராகுல் காந்தி அவர்களுடன் கலந்துரையாடி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார்.

கடந்த மே மாதம் அரியானா மாநிலம், முர்தால் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து அம்பாலா நகருக்கு லாரியில் பயணம் செய்தார். லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கலந்துரையாடிய படி பயணம் செய்த ராகுல் காந்தி அவர்கள்து அன்றாடம் படும் துன்பங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

அதேபோல் கடந்த ஜூலை 8ஆம் தேதி டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு அரியானா மாநிலம் வழியாக சென்று கொண்டு இருந்த ராகுல் காந்தி, அங்குள்ள சோனிபட் மாவட்டம் மதினா கிராமத்திற்கு திடீரென சென்றார். அங்கு விவசாயிகள் நடவு பணிக்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில் அவர்களுடன் கலந்துரையாடி தானும் வயல் வெளியில் இறங்கி நடவு பணியில் ஈடுபட்டார்.

அடிக்கடி பொது வெளியில் தோன்றி மக்களுடன் மக்களாக வலம் வருவதை ராகுல் காந்தி வாடிக்கையாக கொண்டு உள்ளார். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் பெரிய மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியில் மூச்சு விட கூட நேரம் இல்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆசாத்பூர் மந்தி மார்க்கெட்டுக்கு ராகுல் காந்தி சென்றார்.

ராகுல் காந்தியை பார்த்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆச்சரியமடைந்து அவருடன் ஆர்வமாக பேசினர். ராகுல் காந்தியும் காய்கறி மற்றும் பழங்களின் விலை குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்து கொண்டார். அதிகாலை 4 மணிக்கு ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்ற ராகுல் காந்தி, அதிகாலையிலேயே மக்கள் மற்றும் வியாபாரிகள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நேரில் பார்த்தார்.

முன்னதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஆசாத்பூர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரி ஒருவர் கண்ணீர் விட்டபடி, "தக்காளி விலை அதிகமாக உள்ளது. அதை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. மீறி வாங்கினாலும் அந்த தக்காளியை எந்த விலைக்கு விற்பனை செய்வதில் குழப்பம் உள்ளது. அதோடு நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது" என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட். 1) அதிகாலையிலேயே ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடியதாக கூறப்பட்டு உள்ளது. பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ராகுல் காந்தி கலந்துரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : "அமைச்சர்கள் பின்னால் மறைந்து கொள்கிறார் பிரதமர் மோடி"! - எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.