நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்.08) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, ஏப்ரல் 11 முதல் 14ஆம் தேதி வரை நாட்டில் அதிக அளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, ‘டிக்கா உத்சவ்’ எனப்படும் 'தடுப்பூசி திருவிழா' கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், டிக்கா உத்சவ் கடைபிடிப்பதைக் காட்டிலும், கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கையாள்வதே பெரிய பிரச்னை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி இல்லாதது, வளர்ந்து வரும் கரோனா நெருக்கடியில் மிகக் கடுமையான பிரச்னை. உங்கள் நாட்டு மக்களை ஆபத்தில் ஆழ்த்தி தடுப்பூசி ஏற்றுமதி செய்வது சரியானதா? அனைத்து மாநிலங்களுக்கும் சார்பு இல்லாமல் மத்திய அரசு உதவ வேண்டும். இந்தத் தொற்றுநோயை நாம் அனைவரும் சேர்ந்து ஒன்றாக தோற்கடிக்க வேண்டும்” எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’மோடி இப்படிதான் பதில் சொல்லி இருப்பாரு’ - ட்விட்டரில் டெமோ காட்டும் சு சுவாமி