ETV Bharat / bharat

"மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - சித்தாந்தத்திற்கான போர் தொடரும்" - ராகுல் காந்தி! - Rahul Gandhi X

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் சித்தாந்தத்திற்கான போர் தொடரும் என்றும் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுட்டு உள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 7:27 PM IST

டெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், மிசோரம் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் முதலமைச்சர் கே.சி.ஆரின் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் நடைபெற்றது.

தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்த பாஜக மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்தாலும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், சித்தாந்ததிற்கான போர் தொடரும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். கடினமாக உழைத்த கட்சியினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : பாஜக தலைமை அலுவலகம் செல்லும் பிரதமர் மோடி! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.