ETV Bharat / bharat

அதானி விமானத்தில் சொந்த வீடு போல் ஓய்வெடுக்கிறார் பிரதமர் மோடி - ராகுல் காந்தி - பிரதமர் நரேந்திர மோடி

தொழிலதிபர் அதானியின் விமானத்தில் சொந்த வீடு போல பிரதமர் நரேந்திர மோடி ஓய்வெடுக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Feb 22, 2023, 5:08 PM IST

ஷில்லாங்: மேகாலயாவின் ஷில்லாங்கில் இன்று (பிப். 22) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், பாஜக வகுப்புவாத கொடுமை கட்சியாகும். அனைத்தும் தெரியும் என்று யாருக்கும் மதிப்பளிப்பது கிடையாது. இந்த பாஜகவுக்கு எதிராக கூட்டாக இணைந்து நாம் போராட வேண்டும். பாஜக, மேகாலயாவின் மொழி, கலாச்சாரம், வரலாற்றுக்கு தீங்கு விளைவிக்க காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

மேகாலயா மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் விதமாக பாரம்பரிய உடையை அணிந்துள்ளேன். பிரதமர் மோடியும் அணிவார். ஆனால், உங்களின் கலாச்சாரத்தை அழித்துவிடுவார். தொழிலதிபர் அதானியின் விமானத்தில் சொந்த வீடு போல பிரதமர் நரேந்திர மோடி ஓய்வெடுக்கிறார். இதுகுறித்து கேள்வி எழுப்பினேன். நாடாளுமன்றத்தில் அதானி-மோடி புகைப்படத்தை காட்டி பேசினேன். ஆனால், மோடி பதிலளிக்கவில்லை.

இதையடுத்து மோடி நேரு, காந்தி பெயர் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு நான் நாடாளுமன்றத்திலேயே பதிலளித்திருந்தேன். ஆனால், இதுகுறித்த செய்திகள் பெரும்பாலான ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. மோடியின் கேள்வி மட்டுமே வெளியிடப்பட்டது. பிரதமருடன் நட்பாக இருக்கும் தொழிலதிபர்கள் செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

தொழிலதிபர் அதானி விவகாரத்தில் காங்கிரஸ் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதானியின் வளர்ச்சிக்கு மோடி ஆதரவளித்து வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஹிண்டன்பர்க் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: வார்த்தை போர் எதிரொலி: இரு பெண் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.