ETV Bharat / bharat

ஹத்ராஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரை ஒடுக்கும் யோகி அரசு - ராகுல் விமர்சனம்

டெல்லி: ஹத்ராஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரை யோகி தலைமையிலான மாநில அரசு தாங்க முடியாத அளவு ஒடுக்கிவருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Nov 22, 2020, 4:34 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் செப்டம்பர் 14ஆம் தேதியன்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைத்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை, சிலர் கண்டெடுத்தனர்.

அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை செப்டம்பர் 30ஆம் தேதியன்று நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்படுகொலை வழக்கை கையாண்ட உத்தரப் பிரதேச அரசின் போக்கிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வீட்டு சிறைக்கு இணையான சூழலில் வாழ்ந்து வருவதாக மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.

ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்தி ட்வீட்

இந்நிலையில், ஹத்ராஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரை யோகி தலைமையிலான மாநில அரசு தாங்க முடியாத அளவு ஒடுக்கிவருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை தாங்க முடியாத அளவுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒடுக்கிவருகிறது. ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாடும் நீதி கேட்டு துணை நிற்கிறது. குண்டர்களின் ஆட்சியில் சீருடை அணிந்த ரவுடிகளின் போக்குக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.