ETV Bharat / bharat

வெறும் பேச்சு மக்களுக்கு எந்தவகையிலும் உதவாது - ராகுல் காந்தி விமர்சனம்

'மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது' எனப் பிரதமரின் 'மனதில் குரல்' நிகழ்ச்சி உரையை, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி விமர்சனம்
ராகுல் காந்தி விமர்சனம்
author img

By

Published : May 30, 2021, 8:19 PM IST

டெல்லி: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய உரையை காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அதில், 'கரோனாவுக்கு எதிராகப் போராட சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவை தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது' என்று அவர் என்று கடிந்துள்ளார்.

இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'கரோனா இரண்டாவது அலை இந்தியாவை தாக்கிய போது, ஆக்ஸிஜன் தேவை அதிகளவு அதிகரித்து பெரிய சவாலாக மாறியது. வெகு தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது பெரிய சவாலாக இருந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 10 மடங்கு உயர்வு என்றார்.

மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தன்னலமற்ற வகையில் இரவு, பகலாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் எனப் பாராட்டிய பிரதமர், கரோனா இரண்டாது அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்த இவர்களின் முழு பணியும், ஒத்துழைப்பும் பெரும் உதவியாக இருக்கிறது' என்றார்.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக கரோனா தொற்று இந்தியாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கரோனா பெருந்தொற்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சரியாக கையாளவில்லை என்று தொடக்கம் முதலே ராகுல் காந்தி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.