நாட்டின் தடுப்பூசித் திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, பொய்க்கதைகள்தான் உள்ளதே தவிர தடுப்பூசி இல்லை என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். மேலும், ’தடுப்பூசிகள் எங்கே’ என்றும் ஹாஷ்டாக் இட்டு தனது ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.
-
जुमले हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) July 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
वैक्सीन नहीं!#WhereAreVaccines pic.twitter.com/TOsSkHoOIl
">जुमले हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) July 14, 2021
वैक्सीन नहीं!#WhereAreVaccines pic.twitter.com/TOsSkHoOIlजुमले हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) July 14, 2021
वैक्सीन नहीं!#WhereAreVaccines pic.twitter.com/TOsSkHoOIl
அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "வரும் டிசம்பருக்குள் வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என அரசு வாக்குறுதி அளித்துள்ளது. அரசின் வாக்குறுதி போலியானது. தற்போதைய சூழலில் இது சாத்தியமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தடுப்பூசி விநியோகம் சீராக நடைபெறுகிறது என்றும் மாநிலங்களின் கையிருப்பில் 1.91 கோடி தடுப்பூசி டோஸ்கள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிலவரம்: ஒரே நாளில் 38,792 பேருக்கு பாதிப்பு