பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை மேற்கோள்காட்டி, மத்திய அரசை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்ட ட்வீட் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
- " அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும்
- ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
- 50 நாள்கள் கொடுங்கள்...இல்லையென்றால்...(பணமதிப்பிழப்பு நடவடிக்கை)
- கரோனாவை 21 நாள்களில் விரட்டியடித்து வெற்றிகொள்வோம்
- யாரும் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை, எந்தப் பகுதியையும் கைப்பற்றவில்லை..
பிரதமர் மோடியின் இதுபோன்ற பல வாக்குறுதிகளை அறிந்து வைத்திருக்கும் விவசாயிகள் ஒருபோதும் மோடியை நம்பமாட்டர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மற்றொரு ட்விட்டர் பதிவில், நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
நாட்டில் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வேலை இழப்புகள் குறித்த ஊடக அறிக்கையை மேற்கோள் காட்டி ட்வீட் செய்த ராகுல் காந்தி, "இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![ராகுல்காந்தி ட்விட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10055069_rahul.jpg)
பொதுமக்கள் பணவீக்கத்தால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களால் தாக்கப்படுகிறார்கள், இதுதான் பிரதமர் மோடி அரசு" என்று தெரிவித்திருந்தார்"
மேலும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.