Rahul Gandhi Security Breach: ஹோசியார்பூர்(பஞ்சாப்): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் திடீரென மர்ம நபர் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் பாதயாத்திரையை முடிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு உள்ளார். கடந்த 14ஆம் தேதி லூதியானா அடுத்த பிள்லெளர் பகுதியில் சென்ற பாதயாத்திரையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
-
#WATCH | Punjab: A man tried to hug Congress MP Rahul Gandhi, during Bharat Jodo Yatra in Hoshiarpur, was later pulled away by workers.
— ANI (@ANI) January 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Source: Congress social media) pic.twitter.com/aybyojZ1ps
">#WATCH | Punjab: A man tried to hug Congress MP Rahul Gandhi, during Bharat Jodo Yatra in Hoshiarpur, was later pulled away by workers.
— ANI (@ANI) January 17, 2023
(Source: Congress social media) pic.twitter.com/aybyojZ1ps#WATCH | Punjab: A man tried to hug Congress MP Rahul Gandhi, during Bharat Jodo Yatra in Hoshiarpur, was later pulled away by workers.
— ANI (@ANI) January 17, 2023
(Source: Congress social media) pic.twitter.com/aybyojZ1ps
நேற்று முன்தினம் ஜலந்தர் பகுதியில் மீண்டும் யாத்திரை தொடங்கப்பட்டது. ஹோசியார்பூர் பகுதியில் யாத்திரை சென்று கொண்டு இருந்த நிலையில், கூட்டத்தில் இருந்து ஓடி வந்த நபர் திடீரென ராகுல் காந்தியை கட்டிப் பிடித்தார். ஒருகணம் அந்த இடமே பரபரப்பானது. தொடர்ந்து அருகில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை கட்டிப்பிடித்த நபரை விலக்கி அப்புறப்படுத்தினர்.
அருகில் இருந்த பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டார். டெல்லி வழியாக ராகுல் காந்தி யாத்திரைக்கு மேற்கொள்ளும் போதே அவருக்கு முறையாக பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சியினர் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Emergency Exit: இண்டிகோ அறிக்கை அளிக்க டிஜிசிஏ உத்தரவு.. பொய்யர் என செந்தில் பாலாஜி ட்வீட்டியது யாரை?