ETV Bharat / bharat

வீடியோ: விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி - Rahul Gandhi in Kerala

கேரள மாநிலம் வயநாட்டில் பைக் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

rahul-gandhi-helps-to-shift-accident-victim-to-hospital-in-kerala

author img

By

Published : Jul 3, 2022, 1:00 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவருகிறார். அந்த வகையில், நேற்று (ஜூலை 2) நிலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

  • It is Rahul Gandhi who has compassion and sacrifice in his veins and the Nation's service in his heart.

    Shri @RahulGandhi Ji stopped his ambulance to help an accident-prone person and took him in his convoy's ambulance to the hospital. pic.twitter.com/lxhy52xgkc

    — Indian Youth Congress (@IYC) July 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரது கார் சென்ற வழியில் பைக் விபத்து ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ராகுல் காந்தி உடனே காரிலிருந்து இறங்கி விபத்தில் சிக்கிய வாகனவோட்டியை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினார்.

இதனிடையே ஸ்ட்ரெச்சரை அவரே தள்ளிக்கொண்டு வந்தார். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. முதல்கட்ட தகவலில் விபத்தில் சிக்கியவர் அதே பகுதியை சேர்ந்த அபூபக்கர் என்பதும், அவர் மருத்துவமனையில் பாதுகாப்பாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பாஜக தேசிய செயற்குழுவில் இன்று பிரதமர் மோடி உரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.