ஆலப்புழா: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ" என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 11ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். 11வது நாளாக இன்று (செப்.18) ஆலப்புழாவில் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் நடைபயணம் சென்றார்.
அப்போது அவருடன் நடந்து சென்ற தொண்டரின் குழந்தைக்கு காலணி கழன்றது. அதைப் பார்த்த ராகுல்காந்தி, அந்த சிறுமியின் காலணியை சரியாக மாட்டிவிட்டார். ராகுல்காந்தி சிறுமியின் காலணியை சரிசெய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், "ராகுல்காந்தியை பார்ப்பதற்காக எனது மகள் அதிகாலையில் 4 மணிக்கே எழுந்துவிட்டாள். ராகுல்காந்தி மிகவும் எளிமையான மனிதர். அவரைப் பார்க்க விஐபி போல இல்லை. இதுபோன்ற ஒரு தலைவர்தான் நாட்டுக்கு தேவை" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முடிந்தது...கேரளாவில் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி...