டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2ஆம் கட்ட விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (ஜூலை 26) ஏபிஜே அப்துல் கலாம் சாலை அருகே உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
तानाशाही देखिए, शांतिपूर्ण प्रदर्शन नहीं कर सकते, महंगाई और बेरोज़गारी पर चर्चा नहीं कर सकते।
— Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
पुलिस और एजेंसियों का दुरूपयोग करके, हमें गिरफ़्तार करके भी, कभी चुप नहीं करा पाओगे।
'सत्य' ही इस तानाशाही का अंत करेगा। pic.twitter.com/M0kUXcwH8L
">तानाशाही देखिए, शांतिपूर्ण प्रदर्शन नहीं कर सकते, महंगाई और बेरोज़गारी पर चर्चा नहीं कर सकते।
— Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2022
पुलिस और एजेंसियों का दुरूपयोग करके, हमें गिरफ़्तार करके भी, कभी चुप नहीं करा पाओगे।
'सत्य' ही इस तानाशाही का अंत करेगा। pic.twitter.com/M0kUXcwH8Lतानाशाही देखिए, शांतिपूर्ण प्रदर्शन नहीं कर सकते, महंगाई और बेरोज़गारी पर चर्चा नहीं कर सकते।
— Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2022
पुलिस और एजेंसियों का दुरूपयोग करके, हमें गिरफ़्तार करके भी, कभी चुप नहीं करा पाओगे।
'सत्य' ही इस तानाशाही का अंत करेगा। pic.twitter.com/M0kUXcwH8L
அந்த வகையில், டெல்லியின் விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருந்தனர். இவர்களை தடுத்த போலீசார் ராகுல் காந்தியுடன் அனைவரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.
இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சர்வாதிகாரத்தை பாருங்கள். நாட்டில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை யாரும் நடத்த முடியாது. பணவீக்கம், வேலையின்மை பற்றி விவாதிக்க முடியாது. காவல்துறையையும், ஏஜென்சிகளையும் தவறாகப் பயன்படுத்தி, எங்களை கைது செய்தாலும், ஒருபோதும் அமைதிப்படுத்த முடியாது. உண்மை ஒருநாள் இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு: 2ஆம் கட்ட விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜர்