மும்பை: மும்பையில் நேற்று (ஆக.31) நடந்த 'I.N.D.I.A' கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒ.சி.சி.ஆர்.பி. (OCCRP) வெளியிட்ட அறிக்கை குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "ஒ.சி.சி.ஆர்.பி. அறிக்கை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. முதலில், இவை யாருடைய பணம்? இது அதானியுடையதா? அல்லது வேறு யாருடையதாவதா? இதில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் மற்றும் இரண்டு வெளிநாட்டு நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
'முதலில், இவை யாருடைய பணம்? இவையனைத்தும் அதானியுடையதா? அல்லது வேறு யாருடையதாவதா? இந்த விவகாரத்தில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் மற்றும் இரண்டு வெளிநாட்டு நபர்கள் தொடர்பு இருக்கிறது. இரண்டாவது கேள்வி, இந்தியாவில் உள் கட்டமைப்பு வசதிகல் போன்ற விவகாரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தலையிட்டு விளையாட அனுமதித்தது ஏன்?
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட செபி, இதில் அதானி குழுமம் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அளித்தவர் அதே குழுமத்தை சேர்ந்த ஒரு மீடியா நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். இந்தியாவிற்கான துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை வாங்குவதற்கு வெளிநாட்டு பணத்தை திணிக்கும் செயலாக இந்நிர்வாகம் உள்ளது.
இந்த விவகாரத்தில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதி காத்து வருகிறார்? ஏன் இது நாட்டின் முக்கிய பிரச்னையாக தெரியவில்லையா? இந்த விஷயம் தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்கள் இதுவரையில் ஏன் விசாரணை செய்ய முன்வரவில்லை?
இந்த விவகாரம் தொடர்பாக, முழுமையான விசாரணைக்கு கூட்டு நாடாளுமன்ற குழு ஒன்றை அமைப்பதற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும். சர்வதேச அரங்கில், இந்த விவகாரம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது. பல பில்லியன் டாலர்கள் நமது நாட்டைவிட்டு வெளியேறுகிறது என்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த நபர், அந்நிறுவனத்தின் ஊழியராக இருந்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய ராகுல் காந்தி, ''இந்தியாவின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளும் ஜி20 உச்சி மாநாட்டினை உற்றுநோக்கி வருகின்றனர். செபி விசாரணை மேற்கொண்ட நபரே, அதானி குழுமத்தில் ஊழியராக இருப்பதால், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதிலிருந்தே பிரதமருக்கும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று தெரியவருகிறது'' என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு இதுகுறித்து பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொள்ள தயங்குவது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயார் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!