சண்டிகர்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் "பாரத் ஜடோ யாத்திரை", தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பயணித்துள்ளது. கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்த யாத்திரை, ஹரியானாவின் சில பகுதிகளுக்கும் பயணித்தது. இந்த யாத்திரையின்போது ராகுல்காந்தி ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் உரையாற்றினார்.
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவு ஏற்பட்டு டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்ப்பதற்காக ராகுல்காந்தி டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில், ராகுல்காந்தி தாயாரைப் பார்த்துவிட்டு இன்று(ஜன.6) காலை ஹரியானா திரும்பினார். இதையடுத்து பானிபட்டிலிருந்து பாரத் ஜடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது.
ஹரியானாவில் கர்னூல், குருசேத்ரா, அம்பாலா மாவட்டங்கள் வழியாக சென்று யாத்திரை பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழையும். வரும் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் பாரத் ஜடோ யாத்திரை நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனாவால் ஆண்மை குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!