ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசியால் தொழிலதிபர்கள் மட்டுமே பயன் அடைவார்கள் - ராகுல் காந்தி

author img

By

Published : Apr 21, 2021, 9:58 PM IST

கரோனா தடுப்பூசியால் தொழிலதிபர்கள் மட்டுமே பயன் அடைவார்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கரோனா தடுப்பூசியால் தொழிலதிபர்கள் மட்டுமே பயனடையார்கள்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ''கரோனா தடுப்பூசி திருவிழா என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் தங்களது பணம், வாழ்க்கை, பாதுகாப்பு என அனைத்தையும் இழந்து வரிசையில் நிற்க, இறுதியில் சில தொழிலதிபர்கள்தான் பயன் அடைகிறார்கள்.

आपदा देश की
अवसर मोदी मित्रों का
अन्याय केंद्र सरकार का!#VaccineDiscrimination pic.twitter.com/oOTC77AmkB

— Rahul Gandhi (@RahulGandhi) April 21, 2021 ">

மத்திய அரசின் திட்டத்தால் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்காமல் போகும். கரோனா தடுப்பூசிகளின் விலைகள் இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அரசின் கரோனா தடுப்பூசி திட்டமானது பாரபட்சமானதாக இருக்கிறது’’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாசிக் மருத்துவமனையில் சோகம்: ஆக்சிஜன் குறைபாட்டால் 22 பேர் உயிரிழப்பு!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ''கரோனா தடுப்பூசி திருவிழா என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் தங்களது பணம், வாழ்க்கை, பாதுகாப்பு என அனைத்தையும் இழந்து வரிசையில் நிற்க, இறுதியில் சில தொழிலதிபர்கள்தான் பயன் அடைகிறார்கள்.

மத்திய அரசின் திட்டத்தால் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்காமல் போகும். கரோனா தடுப்பூசிகளின் விலைகள் இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அரசின் கரோனா தடுப்பூசி திட்டமானது பாரபட்சமானதாக இருக்கிறது’’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாசிக் மருத்துவமனையில் சோகம்: ஆக்சிஜன் குறைபாட்டால் 22 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.