இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், “ பாஜகவின் அழுத்தத்திற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் அடிபணிந்து கிடக்கிறார். இந்நிகழ்வுகளை எல்லாம் எதிர்கொள்ள அவர் முன்கூட்டியே தயாராக இருந்திருக்க வேண்டும். பிகார் முதலமைச்சராக இருந்தாலும் அவர் தற்போது கையாலாகாதவராகவே உள்ளார்.
பாஜகவின் விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு அவரிடம் பணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் அழுத்தத்தின் கீழ் பணியாற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. திணிப்பதை ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை.
நிதிஷ்குமாரிடம் ஆலோசிக்காமல் மாநிலத்தின் முக்கிய நிர்வாக மறுசீரமைப்பு குறித்து பாஜக முடிவெடுக்கிறது. பாஜகவின் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது” என்றார்.
இதையும் படிங்க : பரிம்போரா போலி என்கவுன்டர் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்!