டெல்லி: ஜனவரி 30ஆம் தேதி குதுப் மினார் வண்ண விளக்குகளால் ஒளிரவிடப்படும் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டாவது உலக புறக்கணிக்கப்பட்ட வெப்ப நோய் தினத்தினை முன்னிட்டு, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்று இந்தியாவின் பிற முக்கிய இடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
உலகத்தின் ஐந்தில் ஒரு நபர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 25 நாடுகள் ஒன்றிணைந்து இந்த தினத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த பருவ கால நோய் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகளுடன் இந்தியா ஒன்றிணைந்து இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.