ஹைதராபாத்: காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் தற்போதுள்ள எம்.எஸ்.பி (குறைந்த ஆதார விலை) திட்டங்களின்படி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது.
காரிஃப் 2020-21க்கான நெல் கொள்முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரகண்ட், தமிழ்நாடு, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் , மகாராஷ்டிரா, பிகார், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து 05.02.2021 வரை 614.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு இது இது 521.93 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 17.69 சதவீதம் அதிகமாகும். அரசின் மொத்த கொள்முதலில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மொத்தம் 202.82 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த கொள்முதலில் 33.01 சதவீதமாகும்.
ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 974.36 கோடி ரூபாய் வரை நடந்துள்ள இந்த வணிகத்தில் சுமார் 85.67 லட்சம் விவசாயிகள் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், மாநிலங்களின் முன்மொழிவின் அடிப்படையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை கரீஃப் சந்தைப்படுத்தல் சீசன் 2020 கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: பணிகள் மந்தமாக இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!