சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் ஆறாவது ஊதிய கமிஷனை எதிர்த்து பஞ்சாப் அரசு மருத்துவர்கள் ஜூலை 12 முதல் 14ஆம் தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை பஞ்சாப் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியப்படியை 25 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு குறைக்கப்பட்டதற்கும் இந்த கூட்டமைப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
போராட்ட அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இந்தர்வீர் கில் "இதற்கு முன்னதாகவே மூன்று முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம் என அரசு அறிவித்தது.
அதை நம்பி நாங்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், ஒரு வாரத்திற்கு மேலாகியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஏமாற்றிவருகிறது.
எனவே, நாங்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
இதையும் படிங்க: 'போராடு... அதற்கான உரிமை உண்டு' - உயர் நீதிமன்றம் கருத்து