சண்டிகர்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக இளைஞரணித்தலைவர் தஜிந்திரபால் பக்கா இன்று டெல்லியில்(மே 6) உள்ள அவரது வீட்டில் பஞ்சாப் போலீஸார் 50 பேரால் சுற்றி வளைக்கப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டர். முன்னதாக பஞ்சாப் காவல் துறையினருக்கு தஜிந்திரபால் பக்கா குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர் அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த கைதால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.
இந்த கைது சம்பவத்தையடுத்து பல பாஜக தலைவர்கள் ட்விட்டரில் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டரில், ’தஜிந்தர்பால் பக்காவை 50 பஞ்சாப் போலீசார் கைது செய்து அவரது வீட்டில் இருந்து அழைத்துச்சென்றனர். மேலும், தஜிந்தர்பால் பக்கா ஒரு உண்மையான சர்தார். இதுபோன்ற செயல்களால் அவரை பயமுறுத்தவோ பலவீனப்படுத்தவோ முடியாது. உண்மையான தலைவருக்கு ஏன் இப்படி பயம்?’ எனவும் மிஸ்ரா கேள்வி எழுப்பினார்.
மற்றொரு பாஜக தலைவர் அருண் யாதவ், கெஜ்ரிவால் தஜிந்தர்பால் பக்காவுக்கு பயப்படுகிறார் என்று கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் "கெஜ்ரிவால் தஜிந்தர் பக்காவுக்கு பயந்துவிட்டார். இப்போது கோழை கேஜ்ரிவால் பஞ்சாப் காவல்துறையின் உதவியைப் பெறுகிறார். தஜிந்தர் பக்கா பாய் பஞ்சாப் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தின் அறிவை மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பக்கா மீது பஞ்சாப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பிகாரில் 3,000 கி.மீ., பாத யாத்திரை- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!