ETV Bharat / bharat

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபருக்கு திரும்பிய சுயநினைவு.. சிகிச்சைக்கான பணத்தை திரும்பக்கேட்டு ஆர்ப்பாட்டம்..

author img

By

Published : Feb 13, 2023, 8:17 PM IST

Updated : Feb 13, 2023, 10:41 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் சுயநினைவு திரும்பியதும் தனது சிகிச்சைக்கான பணத்தை மருத்துமனை நிர்வாகம் திருப்பி தர வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் சுயநினைவு திரும்பியதும் போராட்டம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபருக்கு சுயநினைவு திரும்பி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹோஷியார்பூரில் உள்ள ராம் காலனியை சேர்ந்த பகதூர் சிங் என்பவருக்கு இன்று (பிப். 13) அதிகாலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குடும்பத்தினர், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவருக்கு அந்த மருத்துவமனையில் 4 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு சிகிச்சைக்கான பணத்தையும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து குடும்பத்தார் பகதூர் சிங் உடலை இறுதி சடங்குக்காக வீட்டிற்கு எடுத்து செல்லும்போது அசைவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் சுயநினைவுக்கு திரும்பினர். இதையடுத்து குடும்பத்தினர் நடந்ததை அவரிடம் விளக்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த பகதூர் சிங் உறவினர்களுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதோடு உயிரிழந்துவிட்டதாக கவனக்குறைவாகவும், பொய்யாகவும் அறிவித்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனது சிகிக்காக பெற்ற பணத்தை திரும்ப தரக்கோரியும் கோஷமிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சிகிச்சைக்கான பணத்தை திரும்ப பெற்றுதருவதாக உறுதி அளித்தனர்.

இதனையேற்ற பகதூர் சிங் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து, பகதூர் சிங்கின் மனைவி குல்விந்தர் கவுர் கூறுகையில், "எனது கணவரை இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சைக்கான பணத்தை செலுத்தினால் மட்டுமே உடலை தருவோம் என்று தெரிவித்தனர். அதன்படி பணத்தை செலுத்திய பின்பே உடலை கொடுத்தனர். ஆனால், எனது கணவர் உயிரிழக்கவில்லை. இப்படி அறிவித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிசிடிவி: கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ்.. ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மாயம்..

Last Updated : Feb 13, 2023, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.