டெல்லி : பஞ்சாப்பில் நிலவும் உள்கட்சி அரசியல் குழப்பம் குறித்து இருவரும் பேசவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் காங்கிரஸில் உள்கட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளது. முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் மீது காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் அதிருப்தி தெரிவித்துவருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் சித்து, காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அவருக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.
அப்போது கட்சியின் முக்கிய பணிகள், அடுத்தாண்டு சட்டப்பேரவை (2022) தேர்தலுக்கு தயாராகுவது குறித்து பேசப்படும் என்று கூறப்படுகின்றன.
இதையும் படிங்க : ஆண் உடையில் ஆட்டோ ஓட்டும் பஞ்சாப் பெண்!