ETV Bharat / bharat

அமலாக்கத் துறையில் ஆஜராகாத முதலமைச்சர் மகன்! - அமலாக்கத் துறை விசாரணை

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் இரண்டாவது முறையாக அமலாக்க இயக்குநரகத்தில் ஆஜராகவில்லை.

punjab-cms-son-again-skips-ed-hearing
punjab-cms-son-again-skips-ed-hearing
author img

By

Published : Nov 6, 2020, 4:21 PM IST

டெல்லி, ஜலந்தரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் மண்டல அலுவலகத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் இரண்டாக முறையாக இன்றும் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகுமாறு ஏற்கனவே ஒரு முறை அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில், தற்போது உடல் நலக்குறைவு காரணங்களைச் சுட்டிக்காட்டி ரனீந்தர் சிங், இரண்டாவது முறையாக ஆஜராகாவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் ஜெய்வர் ஷெர்கில், "ரனீந்தர் சிங் அதிக காய்ச்சல், இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் நேரில் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சட்டவிரோத வெளிநாட்டு நிதி வழக்கு தொடர்பான விசாரணைக்கு அக்டோபர் 27ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ரனீந்தருக்கு அமலாக்கத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும், இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராக உள்ள ரனீந்தர் சிங் 2021 ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான விசாரணைக்காக நாடாளுமன்ற நிலைக்குழு முன்னும் ஆஜராகவில்லை.

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அமலாக்கத் துறை, வருமான வரித் துறையிலிருந்து தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடர்ச்சியாக பல்வேறு நோட்டீஸ்கள் வருவது ஏன் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் கல்லூரி படிப்பை முடிக்காத தனது பேர பிள்ளைகளுக்கும் நோட்டீஸ் வந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.