ETV Bharat / bharat

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கிருமிநாசினி: விரைவில் அறிமுகம்! - விரைவில் அறிமுகம்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கிருமி நாசினி விரைவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. ஆல்கஹால் இல்லாத கைகளில் வறட்சியை ஏற்படுத்தாத வகையில், இந்த கிருமிநாசினி இருக்கும்.

hand sanitiser
கிருமிநாசினி
author img

By

Published : Jun 17, 2021, 3:59 PM IST

Updated : Jun 17, 2021, 4:54 PM IST

டெல்லி: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கிருமிநாசினியை புனேவைச் சேர்ந்த தொடக்க நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆல்கஹால் இல்லாத, கைகளில் வறட்சியை ஏற்படுத்தாத, நச்சுத்தன்மையற்ற மற்றும் இதமான இந்த கிருமிநாசினி சந்தைகளில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

கோவிட் தொற்று காலத்தில் மக்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்துவருகின்றனர். இதனால் கைகளில் வறட்சி ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண புனேவைச் சேர்ந்த தொடக்க நிறுவனம் ‘வீ இன்னோவேட் பையோ சொல்யூசன்ஸ்’, வெள்ளி நானோ துகள்கள் மூலம் கிருமி நாசினியை தயாரித்துள்ளது.

இந்த வெள்ளி நானோ துகள்கள், வெள்ளி அயனிகளை மெதுவாக மற்றும் நீண்ட நேரம் விடுவித்து நுண்ணுயிரிகளை கொல்கிறது. அதனால் இந்த கிருமிநாசினியை அடிக்கடி பயன்படுத்தத் தேவையில்லை.

இவற்றை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையில், சேமித்து வைக்க முடியும். இந்த கிருமிநாசினி, பரிசோதனைகளை முடித்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பின் ஒப்புதலை பெற்றுள்ளது. நுண்ணுயிரிகளை திறம்பட கொல்வதையும், இந்த கிருமிநாசினி நிரூபித்துள்ளது.

இந்த ‘வீ இன்னோவேட் பையோ சொல்யூசன்ஸ்’ நிறுவனத்துக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவு வளர்ச்சி வாரியத்தின் (National Science & Technology Entrepreneurship Development Board ) கவச் (CAWACH 2020) திட்டத்தின் கீழ் மானிய உதவி அளிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம், கைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளி கரைசல் அடிப்படையிலான கிருமிநாசினியை உருவாக்கியுள்ளது. இதில் உள்ள வெள்ளி நேனோ துகள்கள், கைளில் உள்ள நுண்கிருமிகளை ஒழிக்கும்.

இதையும் படிக்கலாமே: மருத்துவ காரணங்களை காட்டி சிவசங்கர் பாபாவை ஜாமீனில் எடுக்க முயற்சி!

Last Updated : Jun 17, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.