சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலைத் தடுத்திட மாஸ்க் அணிவது கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பல விதமான மாஸ்க்குகள் விற்பனையில் உள்ளன. இருப்பினும், எவை நிச்சயமாக கரோனா தொற்றைத் தடுக்கும் என்பது கேள்விக் குறியாகவே தான் உள்ளது.
![coronavirus](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12137568_mask.jpg)
புதிய 3டி விருசிடேல் மாஸ்க்
இந்நிலையில், கரோனா தொற்றை 95 விழுக்காடு அழிக்கும் புதிய 3டி மாஸ்க்கை புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான திங்கர் டெக்னாலஜிஸ் உருவாக்கியுள்ளது.
மொத்தமாக மூன்று லேயர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாஸ்க்கில் வைரஸை அழித்திட 'விருசிடேல்' எனப்படும் வைரஸ் எதிர்ப்புப் பொருள் பூசப்பட்டுள்ளது. உள்புற அடுக்கு, 100 விழுக்காடு பருத்தியால் உருவாக்கப்பட்டிருக்கும். இது சுவாசிப்பதில் இருக்கும் சிரமங்களைப் போக்கும்.
![3D prints virucidal mask](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12137568_mas.jpg)
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் ஒப்புதல்
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (TDB) இந்த திட்டத்திற்கு நிதியளித்தது. இந்த முகக்கவசத்தின் பயன்பாட்டுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
![coronavirus](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12137568_mm.jpg)
இதுவரை, 6 ஆயிரம் முகக்கவசங்கள் என்ஜிஓ சார்பில் நந்தூர்பார், நாசிக் மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளுக்குச் சுகாதாரப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும், பெங்களூருவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி, கல்லூரிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
இந்த மாஸ்க்கின் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம்.
இதையும் படிங்க: தீயில் சிக்கிய குழந்தைகளை குழாயில் ஏறி காப்பாற்றிய ரியல் ஹிரோக்கள்