ETV Bharat / bharat

பிரதமர் பிறந்தநாளில் டீ, சமோசா விற்று புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்! - Puducherry

Puducherry Youth Congress Protest: புதுச்சேரி இளைஞர் காங்கிரசார், பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை வேலையின்மை தினமாக கடைபிடித்து டீ, பக்கோடா, சமோசா விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் பிறந்தநாளை வேலையின்மை தினமாக இளைஞர் காங்கிரசார் அனுசரிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 8:40 PM IST

பிரதமர் பிறந்தநாளை வேலையின்மை தினமாக இளைஞர் காங்கிரசார் அனுசரிப்பு

புதுச்சேரி: குஜராத் முதலமைச்சராக 4 முறையும், இந்தியப் பிரதமராக 2 முறையும் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று (செப்.17) தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அந்த வகையில், அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மு.க.ஸ்டாலின், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி பிறந்தநாளை, வேலையின்மை தினமாக புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் கடைபிடித்து, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக இந்திராகாந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து அதில், “பாஜக அரசு கூறியதுபோல கோடி பேருக்கு வேலை தரவில்லை. நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. ஆசிரியர்கள் கூட ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள்” எனக் கூறி கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் டீ, பக்கோடா, சமோசா விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதிய
சட்டமன்றத்திற்கு நில ஆர்ஜிதம் செய்த விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க காங்கிரஸ் தயார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘சிவி சண்முகம் 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரியும் 6 மணிக்கு பின்பு ஒரு மாதிரியும் பேசுவார்’ - அண்ணாமலை விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.