புதுச்சேரி: மாநிலத்தில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பின்னர், ஆன்லைனில் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழகத்துக்கு கல்வியமைச்சர் நமச்சிவாயம் கடிதம் எழுதினார்.
இதையடுத்து கடந்த 19ஆம் தேதிமுதல் அனைத்து தியரி தேர்வுகளும் ஆன்லைன் முறை மூலம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. அதன்படி இறுதியாண்டு தேர்வுகள் பல துறைகளில் தொடங்கியது.
இந்நிலையில், இன்று (ஜுலை 23) பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர், அனைத்துக் கல்லூரிகளுக்கும் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "யுஜிசி வழிகாட்டுதலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்.
பட்டப்படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு, பட்ட மேற்படிப்பில் முதலாண்டு பருவத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுகின்றன. அவை அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும்.
அதே நேரத்தில் இம்மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்துதல், தேர்வுக்குப் பதிவுசெய்தல் உள்பட அனைத்து விஷயங்களையும் ஏற்கெனவே தரப்பட்டுள்ள அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சியின் ஆணையர் அதிரடி உத்தரவு: தூய்மைப் பணியாளர்கள் வரவேற்பு!