ETV Bharat / bharat

புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா - காரணம் என்ன?

Puducherry Minister Chandira Priyanka resigns: புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 1:53 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “என் அன்பான புதுச்சேரி, காரைக்கால் நெடுங்காடு மக்களுக்கு உங்கள் சந்திர பிரியங்காவின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக என் பணியினை மன திருப்தியுடனும், மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள்.

ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன் உதாரணங்கள் வரலாற்றில் உள்ளதைப் பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி மக்களுக்காக இரவு, பகல் என ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.

மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். தலித் பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு, அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது.

தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்த பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல. ஆனால் தொடர்ந்து குறி வைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா?

கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்து உள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதி அளிக்கிறேன்.

என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினைத் தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதலமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய, காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்.

மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து, பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.

எனக்கு வாக்களித்து, என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அரசுக்கு முழு ஆதரவு அளித்து வரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான என் நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.

இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை அதிகாரத்தில் பங்கு 33 சதவீத இடஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க:“காவிரி விவகாரத்தில் காங்கிரஸை எதிர்ப்பது போன்று நடிக்க வேண்டும்” - திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.