புதுச்சேரியில் மாவட்ட துணை ஆட்சியர் சுதாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசுப் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவல் அச்சம் காரணமாக தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவோருக்கு வெப்பப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நீதிமன்ற அறிவுறுத்தல்படி வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை அந்தந்த கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மாவட்டத் தேர்தல் அலுவலர் பூர்வா கார்க், புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் அனைத்தும் முழுமையாக வர நள்ளிரவு ஆகும் என்றும், கரோனா நோய்த்தொற்றால் 23 தொகுதிகள் எட்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.