ETV Bharat / bharat

தனியார் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா; மேலாளர் தலைமறைவு.. புதுச்சேரி போலீஸ் தீவிர விசாரணை! - விடுதியில் ரகசிய கேமரா

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் விடுதியில், அறைக்குள் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்டறிந்த இளைஞர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat தங்கும் விடுதியில் ரகசிய கேமரா - அதிரடி சோதனை நடத்திய போலீஸ்

author img

By

Published : Jul 15, 2023, 11:05 PM IST

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா - அதிரடி சோதனை நடத்திய போலீஸ்

புதுச்சேரி: மேரி உழவர்கரையைச் சேர்ந்தவர் 22 வயது இளைஞர். கல்லூரி மாணவரான இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு தனது தோழியுடன், காரைக்கால் 100 அடி சாலையில் உள்ள ‘ஜே ஜே’ தங்கும் விடுதிக்குச் சென்று தங்கியுள்ளார். அப்போது அந்த அறையில் தொலைப்பேசி வயர் இணைப்பு பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து தனது செல்போன் உதவியுடன் அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அந்த பாக்சை பிரியன் பிரித்துள்ளார்.

அப்போது அவற்றில் மிகச் சிறிய அளவிலான நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பது உறுதியானது. அதைக் கண்டுபிடித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து அதில் பதிவாகியிருந்த காட்சிகளை பரிசோதிக்கப் பிரியன் தரப்பு முயன்ற நிலையில், அதை அழிப்பதற்கான முயற்சிகளை விடுதி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

பெண்களை தனி அறையில் ஆபாசமாகப் படம்பிடித்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட முயன்றதோடு அவற்றை அழிக்க முயற்சித்ததாக விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர் ஆகியோர்கள் மீது உரிய ஆதாரங்களுடன் உருளையன்பேட்டை காவல் நிலையம் சென்று பிரியன் முறையிட்டார்.

இதையடுத்து கிழக்கு எஸ்பி சுவாதி சிங் உத்தரவின் பேரில் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான காவல் துறையினர், சம்பந்தப்பட்ட விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், பிரியன் அளித்த புகாரின் பேரில் விடுதியின் மேலாளர் ஆனந்த் (25), ஊழியர் அபிரகாம் (22) ஆகியோர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, தலைமறைவாக உள்ள இருவரையும் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இதேபோல் அந்த விடுதியிலுள்ள மற்ற அறைகளிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான ஆய்வில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்களின் புகைப்படங்களை ஆன்லைனில் விற்பனை செய்த இளைஞர் கைது.. எச்சரிக்கை விடும் காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.