புதுச்சேரி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இனி வருவாய்த்துறை மூலமாக வாரிசு சான்றிதழ் வழங்கப்படும் என்று ஒரு அறிக்கையை அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் வாரிசு உரிமைச் சான்றிதழ் அறிவிப்பை புதுச்சேரி அரசு ரத்து செய்யக்கோரி கூறி பதிமூன்று நீதீமன்றங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
இதையும் படிங்க:சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து