ETV Bharat / bharat

ஜூலை மாத முதியோர் ஓய்வூதியம் வழங்க ஆளுநர் ஒப்புதல் - old age pension

நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திற்கான முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ.39.73 கோடிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
author img

By

Published : Aug 5, 2021, 6:20 AM IST

புதுச்சேரி: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின்கீழ் சலுகைகள் வழங்க, பழங்குடியின மக்களை புதுச்சேரி ஆதி-திராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் (PADCO) வரம்பிற்குள் கொண்டுவருவதற்காக அதன் பெயரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம் (PADSTDCO) என்று பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திற்கான முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ.39.73 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி, அன்னை தெரெசா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, பெருந்தலைவர் காமராசர் மருத்துவக் கல்லூரி ஆகிய சுகாதார கல்வி நிறுவனங்களுக்கு முதலமைச்சரைத் தலைவராகவும் தலைமைச் செயலரைத் துணைத் தலைவராகவும் நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அரசாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.