பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "கோடி கோடியாக கொண்டு வந்து கொடுத்து காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த எட்டப்பன்களை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தார்கள். புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி நிதி கொடுத்ததாக அமித் ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகுகின்றேன். நிரூபிக்க தவறினால் அமித் ஷா அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும். எனது சவாலை ஏற்க அமித் ஷா தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “கரோனா பரவல் இருக்கும் நிலையில் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என ஆளுநர் தமிழிசை கூறியது மாணவர்களை பாதிக்கும் செயலாகும். இதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சர்: புகார் அளித்த ஆர்வலர்!