மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் தொடர்ந்து 62ஆவது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதுச்சேரியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்த இந்த டிராக்டர் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பங்கேற்றனர். டிராக்டர் பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி ட்ராக்டரில் அமர்ந்து இயக்கி தொடங்கி வைத்தார்.
இந்த டிராக்டர் பேரணி புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து நகரின் முக்கிய சந்திப்புகளான இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், சிவாஜி சதுக்கம், காமராஜர் சதுக்கம் வழியாக உப்பளம் துறைமுக வளாகத்தில் நிறைவடைந்தது.
டிராக்டர் பேரணி காரணமாக 100க்கும் மேற்பட்ட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வல்ல... விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல் காந்தி!