ETV Bharat / bharat

புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - puducherry eb workers issue

புதுச்சேரியில் நாளை (பிப்ரவரி 1) முதல் மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

author img

By

Published : Jan 31, 2022, 7:47 PM IST

புதுச்சேரி: மத்திய அரசு, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும், அதன்படி புதுச்சேரியில் உள்ள மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மின் துறை ஊழியர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

ஆனால் அதற்கு எந்தவித பலனும் இல்லாததால் மின் துறையை தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என முதலமைச்சர், துணைநிலை ஆளுநருக்கு மனு அளித்தனர்.

இதன் பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, இன்று (ஜனவரி 31) செய்தியாளரைச் சந்தித்த மின் துறை தனியார்மய எதிர்ப்புப் போராட்டக் குழு, நாளை (பிப்ரவரி 1) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் வேல்முருகன் கூறுகையில், “மின் துறை தனியார்மயமாக்கலைக் கண்டித்து புதுச்சேரியில் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் மின் துறையைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்.

எனவே, மின் துறையில் கட்டணம் வசூலிப்பது, ரீடிங் எடுப்பது உள்ளிட்ட எந்த வேலையும் நடைபெறாது” என்றார். மேலும் அவர், பொதுமக்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டால் அதற்கு மின் துறை ஊழியர்கள் பொறுப்பல்ல; அதற்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் பொறுப்பு எனத் தெரிவித்தார்.

போராட்டங்களுக்கு அரசு ஊழியர் பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் வேல்முருகன் கூறினார்.

இதையும் படிங்க: வங்கியில் போலி நகைகள் மோசடி: கேரளாவைச் சேர்ந்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.