புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 2022-2023ஆம் ஆண்டுக்கான உத்தேச மின்கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதன்பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவிக்கப்பட்டு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. 100 யூனிட்டுக்குள் ரூ.1.55ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90ஆகவும், 101-ல் இருந்து 200 யூனிட் வரை ரூ.2.60ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும் உயர்ந்துள்ளது.
201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.
இதையும் படிங்க:சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர் தான்.. மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன - ஈபிஎஸ்