புதுச்சேரி: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த 7 ஆம் தேதி முதல் அனைத்து பெட்ரோல் பங்குகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று (ஜூலை.10) புதுச்சேரி மாநில ஓபிசி மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் முத்தியால்பேட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாட்டு வண்டியில் பயணம்
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் மாட்டு வண்டியில் பயணம் செய்தும், ஆட்டோவை மாட்டு வண்டியில் கட்டி இழுத்தும் கண்டனத்தை தெரிவித்தனர். இதில் 50 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.