ETV Bharat / bharat

புதுச்சேரி கல்லூரிப் பேராசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - Puducherry College professors on indefinite hunger strike

புதுச்சேரி சொசைட்டி கல்லூரிப் பேராசிரியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்ரவரி 25) மாலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி கல்லூரிப் பேராசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

author img

By

Published : Feb 25, 2022, 9:50 PM IST

  • புதுவையில் உள்ள நான்கு சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஊதிய நாளன்று ஊதியம் வழங்க வேண்டும்
  • நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள பணி உயர்வு, ஏழாவது ஊதிய வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி வழங்க வேண்டும்
  • முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும்
  • மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆறாவது - ஏழாவது ஊதிய குழுக்களின் பரிந்துரைகளின்படி கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்துதல்

உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி உயர் கல்விக் குழுமத்தின்கீழ் இயங்கும் நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், காரைக்காலில் உள்ள கல்வியல் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் கதிர்காமம் இந்திராகாந்தி கலைக் கல்லூரி முன்பு இன்று மாலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் புதுச்சேரியில் உள்ள நான்கு சொசைட்டி கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கண்டித்து முதுகலை ஆசிரியர்கள் போராட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.