ETV Bharat / bharat

'மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்' - புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

eb privatization in pudhucherry
'மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்' - புதுச்சேரி முதலமைச்சர்
author img

By

Published : Dec 5, 2020, 5:05 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி, அம்மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார். விவசாயிகளின் போராட்டத்தை புதுச்சேரி அரசு ஆதரிக்கிறது. மத்திய அரசு உடனடியாக பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்டி 3 சட்டங்களையும் வாபஸ் பெறவேண்டும். புயலால் புதுச்சேரியில் 400 கோடி ரூபாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், இடைக்கால நிவாரணமாக 100 கோடி ரூபாய் வழங்க பிரதமரை வலியுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில், திங்கட்கிழமை புதுச்சேரிக்கு வருகை தரும் மத்திய குழுவிடம் வெள்ள பாதிப்புகளை தெரிவிப்போம். புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு மறுத்து மின்துறை தனியார்மயமாக்கப்படும் என கூறியுள்ளது.

'மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்' - புதுச்சேரி முதலமைச்சர்

இதை எதிர்த்து புதுச்சேரி அரசு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. தனியார்மயத்தை எதிர்த்துப் போராடும் மின்துறை ஊழியர்கள் மக்களுக்கு இடையூறு செய்யாமல் போராடவேண்டும்ய கிரிக்கெட் மைதான விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் சட்டவிரோத செயலை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும், துணை நிலை ஆளுநர் தடுத்தாலும் இந்தியாவில் நான்கு துறைகளில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி தேர்வு செயய்ப்பட்டுள்ளது பெருமைக்குரியது" என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தால் அரசிற்கு வருவாய் இழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.