ETV Bharat / bharat

புதுச்சேரி முதலமைச்சர் பொதுமக்களிடம் பகிங்கர மன்னிப்புக்கேட்க வேண்டும்:நாராயணசாமி காட்டம்

author img

By

Published : Sep 6, 2022, 8:12 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் பொது மக்களிடம் பகிங்கர மன்னிப்புக்கேட்க வேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கேரளாவில் நடைபெற்ற தென்மண்டல மாநில மாநாட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஏன் கலந்துகொள்ளவில்லை. ஆளுநர், புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த ஒரு நிதியையும் கேட்கமாட்டார்.

அவர் மத்திய அரசுக்கு சாதகமாகத் தான் இருப்பார். ரங்கசாமி மாநில மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்து உள்ளார். எனவே, புதுச்சேரி மக்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி பொது மன்னிப்புக்கேட்க வேண்டும். காரைக்கால் மாணவன் விஷம் கொடுத்து உயிர் இழந்தது வருத்தத்தைத் தருகிறது. மருத்துவர் அவருக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள, மருத்துவரின் மெத்தனம் தான் அந்த மாணவனின் உயிரைப் பறித்து உள்ளது. மருத்துவமனையின் அவலமான நிலை மற்றும் காவல் துறை உரிய விசாரணை செய்யாமல் தவறி இருக்கிறது. முதலமைச்சர் இது சம்பந்தமாக நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். விசாரணை செய்து அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: ஆதரவாளர் இசக்கி முத்துவை சந்தித்து உடல் நலம் விசாரித்த மு.க அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.