புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன.
இதுவரை புதுச்சேரியில் 944மி.மீ மழையும் காரைக்காலில் 877மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையினால் கிராமப்புற பகுதி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. அதுமட்டுமல்லாது சாலைகள், வீடுகள் என சேதமடைந்துள்ளன.
இதையடுத்து புதுச்சேரியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு ஆளுநர், முதலமைச்சர் ராமசாமி ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், இன்று (நவ. 22) மத்திய குழுவினர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வருகின்றனர்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை அலுவலர்களிடம் மத்திய குழுவினர் கலந்துரையாடுகின்றனர்.
அப்போது புதுச்சேரி ,காரைக்கால் பிராந்தியங்களில் துறை வாரியாக விவரங்களை மத்திய குழுவிடம் பட்டியலிடப்படவுள்ளது. புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள மழை தேசம் விபரங்களை கணக்கிட்டு , 300 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அம்மாநில அரசு சார்பில் மாநில முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளர்.
இன்று (நவ.22) மத்திய குழுவினர் ஆளுநர் மாளிகையில் தங்குகின்றனர். அதைத்தொடர்ந்து நாளை (நவ. 23) காலை புதுச்சேரியில் மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனர்.
இதையும் படிங்க: CM Rangasamy Inspects: புதுச்சேரி கனமழை பாதிப்பு - ரங்கசாமி நேரில் ஆய்வு