புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் இன்று (மார்ச் 22) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரி சட்டப்பேரவை 2ஆவது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கூடி அன்றைய தினமே மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக வருகிற மார்ச் 30ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டப்பட இருக்கிறது.
அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். மேலும், கூடுதல் செலவீனங்களுக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்று ஒப்புதல் பெறப்படும். அரசின் திட்டங்களை செயல்படுத்தாத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சபாநாயகர் என்ற முறையில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தனக்கு உள்ளது. கூட்டத்தொடரின் தொடர்ச்சி என்பதால் துணைநிலை ஆளுநர் உரை இடம்பெறாது. முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது ஆளுநர் உரை இடம்பெறும். அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவையை பார்வையிட்டு புதிய வடிவமைப்பில் பேரவைக் கட்டப்படும். வரும் மார்ச் 30ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது" என்றார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுப்பாரா அகிலேஷ்.. ராஜினாமா பின்னணி என்ன?