புதுச்சேரி உழவர் கரை நகராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன் தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் லாஸ்பேட்டை பகுதியில் போதிய சாலை வசதிகள் இல்லை எனக் குற்றச்சாட்டி நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கட்சியின் தொண்டர்கள் கலந்துகொண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், லாஸ்பேட்டை சாந்தி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதிகள் செய்ய பூஜைகள் போட்டு வெகு நாட்கள் ஆகியும், இதுவரை சரியாக சாலை வசதிகள் செய்யப்படவில்லை. மழை காலத்தில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: ஒன்றரை வருட சம்பள பாக்கி: புதுச்சேரி கான்பெட் ஊழியர்கள் அரை நிர்வாணப் போராட்டம்