மொத்தம் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், முன்னாள் முதலமைச்சர்கள் நாராயணசாமி, ரங்கசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில் 81.7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகிறது.