புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்டடங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து மேற்புறத்தில் இரும்பிலான தகர கூரைகள் கட்டப்பட்டு மழைநீர் படாத வண்னம் பாதுகாக்கப்படுகிறது. இதற்கிடையே காலாப்பட்டு பகுதியில் சட்டப்பேரவை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கைவிடப்பட்டது .
இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள பின்பக்கம் கட்டடத்தின் மேல்பகுதி, சுவர் இடி தாக்குதலால் இடிந்து கிழே விழுந்தது. இதனால் சட்டப்பேரவையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு வாகனங்கள் மீது மண்கற்கல் விழுந்தன. நான்கு கார்கள் சேதமடைந்தது நள்ளிரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனை கேள்விப்பட்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இன்று காலை நேரில் வந்து சட்டப்பேரவை வளாகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.