ETV Bharat / bharat

ஜிப்மரில் இடஒதுக்கீடு முறைகேடு: 'சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' - admk mla wants cbi investigation

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என துணைநிலை ஆளுநரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

puducherry admk mla wants cbi investigation on JIPMER medical college admission Abuse

author img

By

Published : Nov 9, 2020, 5:00 PM IST

புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், மருத்துவக் கல்வியில் புதுச்சேரி மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் ஆண்டுதோறும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளி மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 64 இடங்களில் 31 இடங்களில் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது புதுச்சேரி மாநிலத்திற்கு ஆண்டுதோறும் இழைக்கப்படும் அநீதி.

ஐந்தாண்டுகள் புதுச்சேரி மாநிலத்தில் குடியிருந்தால் மட்டுமே, புதுச்சேரி குடியுரிமை பெற முடியும். புதுச்சேரியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஓராண்டு பணிபுரிந்தவர்களின் பிள்ளைகளுக்கு மாநிலத்திலுள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை அளிப்பது என்பது தவறான ஒன்று.

மருத்துவக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை பெற்றவர்களா, புதுச்சேரியிலுள்ள பள்ளிகளில் கல்வி பயின்றவர்களா என அவர்களது சான்றிதழ்களை ஆய்வுசெய்த பின்னரே மாணவர்களுக்கு ஜிப்மரில் கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் என்ற பெயரில் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் திட்டமிட்டு அபகரிப்பது மிகப்பெரிய குற்றச் செயலாகும். எனவே ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தினேன்" என்றார்.

இதையும் படிங்க: ஜிப்மர் மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீட்டில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.