புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் வணிகர்களை ஒருங்கிணைத்து, 20 ஆண்டுகளாக வணிகர்கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களில் வலைதள செயலிகள் மூலமாக, சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதனை மாற்றும் வகையில் "புதுவை பஜார்" என்ற பெயரில் வலைதள செயலியை புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு நேற்று (ஜன.03) அறிமுகப்படுத்தியது. "நம்ம ஊரு நம்ம கடை" என்ற வகையில், இதில் 5 லட்சம் வர்த்தகர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை, ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள், கேளிக்கை என அனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை கத்திப்பாரா போன்று திருச்சியிலும் சாலை அமைக்கப்படும் - மேயர் அன்பழகன் தகவல்!
இந்த வலைதள செயலியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களின் பொருட்களை மட்டுமே விற்க முடியும். சர்வதேச செயலியைப் போன்று தள்ளுபடி, சிறப்பு சலுகை அளிக்கப்படும் என புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் சிவசங்கரன் எம்எல்ஏ, தலைவர் பாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், “அனைத்து விதமான வியாபார செயல்பாடுகளுக்கான ஒன் ஸ்டாப் என்று சொல்லக்கூடிய வகையில், புதுவை பஜார் வலைதளம் அமையும். இந்த செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்வது மூலமாக அனைவரும் பயன்பெற முடியும். முன்பதிவு, அவசர சேவை, திரையரங்கில் முன்பதிவு, கல்வி சம்பந்தப்பட்ட இணைப்புகள் போன்ற அனைத்து சேவைகளையும், மக்கள் இதன் மூலம் பெற முடியும்” என்று வணிகர்கள் கூட்டமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நேரில் ஆஜராகாத கெளதம சிகாமணி; ஜன.24-ம் தேதிக்கு மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு!