புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பணியாற்றி வந்த கிரண்பேடி கடந்த 17ஆம் தேதி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தெலங்கானா ஆளுநராக பணியாற்றி வரும் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆளுநர் தமிழிசை இன்று அரசு மருத்துவமனை, அங்கன்வாடி உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த அலுவலர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் சிறப்பு அலுவலராக பணியாற்றிய தேவநீதிதாஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக அநாகரிக அரசியலை செய்துவருகிறது - தொல். திருமாவளவன்