புதுச்சேரி: துணைநிலை ஆளுநருக்கு புதிய ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
![தமிழிசை செளந்தரராஜன் ஆலோசகர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-03-governor-adviicer-tn10044_26022021170558_2602f_1614339358_335.jpg)
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிப்ரவரி 18ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார்.